
சீனாவின் உரும்கி நகரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறும் இனவெறி தாக்குதலை கண்டித்து இன்று திடீர் போராட்டம் நடைபெற்றது.
சீனாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சிஞ்சியான் மாகாணத்தின் உரும்கி நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கலவரத்தில் 197 பேர் பலியானார்கள் ; 1,600 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் கலவரம் ஓய்ந்து அங்கு அமைதி திரும்பிய நிலையில், கடந்த இரு வாரங்களாக இஸ்லாமியர்களை குறிவைத்து ஊசி போடும் சிரிஞ்சால் குத்தி தாக்குதல் நடைபெறுவதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் இந்த தாக்குதலைக் கண்டித்து உரும்கி நகரில் இஸ்லாமியர்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர்.இந்த போராட்டத்தை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதனால் பாதுகாப்பு படையினர் அங்கு கூடுதலாக வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
0 comments:
Post a Comment